"மக்கள் வரிப்பணத்தில் விளம்பரமா?... "என்.எல்.சியின் விளம்பரத்தில் உண்மை இல்லை - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
நில அபகரிப்பு குறித்த என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கத்தை கடலூர் ஆட்சியர் ஆணைப்படி, மக்கள் தொடர்பு அலுவலரே நாளிதழ் விளம்பரமாக வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சியின் விளம்பரத்தில் உண்மை இல்லை என தெரிவித்த அவர், தன்னுடைய விளக்கத்தை என்.எல்.சி தான் விளம்பரமாக வெளியிட வேண்டுமே தவிர, மாவட்ட மக்கள்தொடர்பு அலுவலர் மூலம் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிடச் செய்துள்ளதாக ஆட்சியர் மீது அன்புமணி ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் விளம்பரம் வெளியிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக செலவழிக்கப்பட்ட மக்கள் வரிப்பணத்தை கடலூர் ஆட்சியரிடம் இருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story