2 லட்சம் வளையல்களால் அலங்காரம் - ஜொலித்த அங்காளம்மன்..குவிந்த பக்தர்கள்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் அங்காளம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுமார் இரண்டரை லட்சம் வளையல்கள் கொன்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்ட பின் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அங்காளமனுக்கு ஐந்து வகை உணவு, பலகாரம், சந்தனம் மஞ்சள் ஆகியவை கொண்டு வளைகாப்பு செய்யப்பட்டது.
Next Story