பாஜகவை புறக்கணிக்க ஈபிஎஸ் முடிவா? பாஜக இல்லாமல் தேர்தலை சந்தித்தால் அதிமுக பிளஸ், மைனஸ் என்ன?
நேற்று காலை சரியாக 10 : 30 மணி அளவில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் ஈரோடு பகுதி கழகச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், ஈரோடு மாவட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் என 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டணி கட்சியான தமாகா நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அதில், பாஜக கூட்டணியில் இருந்தால் இஸ்லாமிய வாக்குகளை பெற முடியாமல் போகுமா?, பாஜக இல்லாமல் தேர்தலை சந்தித்தால் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன ? என்று ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால் என்ன யுக்தியை கையாளுவது என்றும் ஈபிஎஸ் விவாதித்ததாக தெரிகிறது.
பெண் வேட்பாளரை நிறுத்தலாமா அல்லது முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை நிறுத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Next Story