காய்கறிகளை மாலையாக அணிந்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..
விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். காய்கறிகளை மாலையாக அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தக்காளி, வெங்காயம், இஞ்சி,பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே எதிர்க்கட்சி துணைக் கொறடா ரவி தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை, சூதாட்டம், கஞ்சா விற்பனை அதிகரித்து,
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கூறி ஆளும் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.