முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக பேசிய திமுக பிரமுகர்.. சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

x

முன்னாள் அதிமுக அமைச்சரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட திமுக பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சட்டத் துறை அமைச்சரும் எம்பியும்மான சிவி சண்முகம் குறித்து விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சி.வி சண்முகம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை பற்றி ஒரு கருத்து தெரிவித்ததாகவும், அந்த கருத்துக்கு எதிர்கருத்தாக சக்திவேல் மிக அவதூறாக, ஆபாசமான வார்த்தைகளில் கொலை மிரட்டல் விடுவது போன்று பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வட சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலமுருகன் காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திலும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்