மது மற்றும் போதை ஒழிப்பிற்கான போராட்டம் ஒத்திவைப்பு... சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு

x

மது மற்றும் போதை ஒழிப்பிற்கான உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று மது மற்றும் போதை ஒழிப்பிற்கான போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், காவல்துறை சென்னையில் மட்டும் அனுமதி வழங்கி, பிற இடங்களில் அனுமதி தர மறுத்த காரணத்தினால் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், நீதிமன்றத்தை நாடி முறையான அனுமதி பெற்று, அனைத்து இடங்களிலும் போராட்டம் நடத்தப்படும் எனவும் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்