அதானி ஷெல் நிறுவனங்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடியை வழங்கியது யார்..? - கேள்வி எழுப்பிய ராகுல்
- அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி வந்தது எப்படி என கேள்வியை எழுப்பியதன் விளைவே தகுதிநீக்கம் எனவும், மக்களவை சபாநாயகர் பேசவிடமாட்டேன் என்றதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
- எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்றத்தில் அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு வந்த 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருடைய பணம் என கேள்வியை எழுப்பியதாகவும், அந்த கேள்வியிலிருந்து பிரதமர் மோடியை பாதுகாக்கவே இப்போது தகுதிநிக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
- நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற வெளிநாட்டு சக்திகளின் உதவியை கோருவதாக பொய்யான குற்றச்சாட்டை அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்த போது, தனது விளக்கத்தை தெரிவிக்க சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனவும் ராகுல் குற்றம் சாட்டினார்.
- அதுகுற்த்து சபாநாயகரிடம் நேரடியாக பேசிய போது, பேச விடமாட்டேன் என சபாநாயகரே கூறிவிட்டார் எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
- தகுதிநீக்கம், சிறை தண்டனை என எதற்கும் பயப்பட மாட்டேன் எனக் கூறிய ராகுல் காந்தி, இந்திய மக்களின் ஜனநாயக குரலை காக்க தனது போராட்டம் தொடரும் எனவும், மோடிக்கும், அதானிக்கும் இடையிலான தொடர்பு குறித்து தனது கேள்வி தொடரும் எனவும் தெரிவித்தார்.
Next Story