அதானி குழும முறைகேடு விவகாரம்.. "விசாரணை நடத்த தயக்கம் ஏன்?" - மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி

x

நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம் பி பிரமோத் திவாரி, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடைபெற்றால் பாஜகவின் முகத்திரை கிழியும் எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் சமிக்ஞையின் அடிப்படையிலேயே பாஜக உறுப்பினர்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சியின் எம் பி ராம்கோபால் யாதவ், விசாரணை நடந்தால் அதானி-மத்திய அரசுக்கு இடையே உள்ள உறவு வெளிப்பட்டுவிடும் என்றும் உண்மையான குற்றவாளி யார் என்பது தெரிந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்