நடிகை யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராக உத்தரவு

x

கடந்த 2021 -ல் ஜூலை 21-ம் தேதி மூன்று நண்பர்களுடன் சென்னை வரும் வழியில், மாமல்லபுரம் அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளி பவனி செட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகா மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜரானார். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி அவரை வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்