நடிகை அபர்ணா பாலமுரளியிடம்...அத்துமீறிய கல்லூரி மாணவன்...ஆப்பு வைத்த கல்லூரி நிர்வாகம்

x

கல்லூரியில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் சலசலப்பு

நடிகையிடம் புகைப்படம் எடுக்கும் போது அத்துமீறிய இளைஞர்

மாணவரிடம் விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ்

கேரளாவில் நடிகையிடம் புகைப்படம் எடுக்கும் போது கல்லூரி மாணவர் அத்துமீறிய விவகாரத்தில், மாணவரிடம் உரிய விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளாவில் நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ள தங்கம் திரைப்படத்தின் அறிமுக விழா எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் நடைபெற்றது.

அப்போது, நடிகை அபர்ணா பாலமுரளியிடம் புகைப்படம் எடுக்க மேடை ஏறிய மாணவர் ஒருவர், அவரிடம் அத்துமீறிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட மாணவரும், கல்லூரியின் மாணவர் பேரவையினரும் நடிகையிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், மாணவரின் விளக்கம் திருப்திகரமாக இல்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்