90-களின் ஹீரோ... நடிகர் சரத்பாபுவின் உடல் நிலை... அதிர்ச்சியடைந்த திரையுலகம்

x
  • செந்தாழம் பூவில் பாடலை கேட்டாலே எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நினைவுக்கு வருபவர் சரத்பாபு...
  • பாலச்சந்தரின் பட்டினபிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமான சரத்பாபு, 70கள், 80களில் மிகவும் பிரபலமான கலைஞனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
  • சரத்பாபுவை நினைத்தாலே ரஜினியுடனான அவரது பயணம் தான் பல ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும்... இதற்கு தொடக்கப்புள்ளி முள்ளும் மலரும்.
  • அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு நண்பனாக அசோக் என்ற கதாபாத்திரம் சரத்பாபுவின் டிரேட்மார்க்...
  • முத்துவில் எஜமானாக அவர் நடித்த காட்சிகள் என்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருப்பவை
  • வெளியூரில் இருந்து கிராமத்திற்கு வருபவர், பணக்காரர் என்ற கதாபாத்திரங்களால் ரசிகர்களிடம் பரீட்சயமானவர் சரத்பாபு..
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த கடைசி படத்தின் கதாநாயகன் என்பது சரத்பாபுவிற்கு கூடுதல் ஸ்பெஷல்
  • இப்படி தமிழ், தெலுங்கு உட்பட 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சரத்பாபு, திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
  • கடந்த சில ஆண்டுகளாக படத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்ட சரத்பாபு, சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.
  • ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த தகவல் வெளியானதில் இருந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • சரத்பாபு பூரண நலமடைய வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்