அரைகுறை ஆடையில் Can i Call you என்ற போட்டோ போட்ட பொண்ணுக்கு Yes என ரிப்ளை கொடுத்த நடிகர் மாரிமுத்து
- நடிகர் மாரிமுத்து... சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான முகம்.. குடும்ப பாங்கான அத்தனை படங்களிலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் கோபக்காரராகவோ, பாசக்காரராகவோ தன் நடிப்பில் பின்னியிருப்பார்...
- ஆனால், நடிகருக்கு முன்பாகவே அவருக்கு இயக்குநர் என்ற முகமும் இருக்கிறது...
- தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து சினிமா கனவுடன் சென்னை வந்தார். நடிகர் ராஜ்கிரணிடம் எல்லாமே என் ராசாதான், அரண்மனை கிளி உள்ளிட்ட படங்களிலும் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இவர்..
- எஸ்.ஜே.சூர்யா, வசந்த் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மாரிமுத்து, பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கினார்.. பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்த மாரிமுத்து, தனியார் தொலைக்காட்சியில் ஆதிமுத்து குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெண்கள் பலரின் சாபத்தையும் வாங்கி கட்டிக் கொண்டவர்...
- பெண்ணியத்திற்கு எதிராக, கண்டிப்பான ஒரு கதாபாத்திரம் இந்த சீரியலில் மாரிமுத்துவுக்கு. திருமண வீட்டில் பெண்கள் நடனமாடுவதை கண்டித்து அவர் பேசிய வசனங்கள் இணையத்தில் பரவவே பெண்கள் பலரும் மாரிமுத்துவை கரித்துக் கொட்டினர்...
- கறாரான பேர்வழி போல என நினைத்த போது யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்த அவர் அத்தனையும் நடிப்பு தான் என விளக்கம் அளித்தார்...
- இந்த நிலையில், சமூக வலைதள பக்கமான ட்விட்டரில், ஆபாச வலைதளத்தில், பெண் ஒருவரின் புகைப்படத்துடன் can i call you என குறிப்பிட்டு பதிவு ஒன்று இருந்தது. அதற்கு நடிகர் மாரிமுத்து பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட அக்கவுண்டில் இருந்து yes என பதிலளித்து செல்போன் நம்பரையும் பதிவிட்ட சம்பவம் சட்டென இணையத்தில் வைரலானது...
- இதை கண்ட இணையவாசிகள், நடிகர் மாரிமுத்துவின் மீம் டெம்ப்ளேட்டை வைத்தே அவரை ட்ரோல் செய்து வந்தனர். அவர் பெண்ணியம் குறித்து பேசிய பதிவுகளையும், தற்போது ஆபாச நோக்கில் பதிவிடப்பட்ட புகைப்படத்தின் கீழ் அவர் பதிலளித்திருந்ததையும் ஒப்பிட்டு வறுத்தெடுத்தனர்.
- இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் மாரிமுத்துவின் மகனான அகிலன் என்பவர், அவருடைய அக்கவுண்டில் இருந்து விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, அந்த பதிவில் இருக்கும் செல்போன் நம்பர் தன்னுடைய தந்தையுடையது தான் என்றும், ஆனால் அந்த ட்விட்டர் கணக்கும், அந்த பதிவும் வேறு யாரோ திட்டமிட்டு செய்தது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
- என் தந்தையின் செல்போன் நம்பர் சினிமா வட்டாரங்களில் உள்ள அனைவரும் வைத்திருக்கும் நிலையில், யாரோ ஒருவர் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் என கூறி விளக்கம் அளித்திருக்கிறார்..
- இதனிடையே தனியார் யூட்யூப் சேனலுக்கு மாரிமுத்து அளித்த பேட்டியில், பெண் ஒருவரிடம் என்னுடைய செல்போன் நம்பரை கொடுத்தேன். ஆனால் அவர் இந்த பெண் இல்லை என கூறியிருக்கிறார்.
- சினிமாவில் நடிகனாக, இயக்குநராக இருப்பதால் என்னுடைய நம்பரை கொடுத்தேன். ஆனால் அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணுக்கு என்னுடைய நம்பரை தரவில்லை என்றும், வேண்டுமென்றே சிலர் இதுபோல் செய்திருக்கிறார்கள் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து...
- அப்படி என்றால் அந்த புகைப்படத்தில் மாரிமுத்துவின் நம்பரை பதிவிட்டது யார்? இத்தனை சர்ச்சைக்கும் ஆரம்ப புள்ளி எது? என்பதற்கெல்லாம் பதில் இல்லை..
Next Story