பேருந்துகளில் ரூ.10, ரூ.20 நாணயம் வாங்க மறுத்தால் நடவடிக்கை
நடத்துநர்கள் பத்து ரூபாய், இருபது ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் நடத்துநர்கள், பயணச்சீட்டு கொடுக்கும்போது, பயணிகளிடம் இருந்து 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக போக்குவரத்து துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள நடத்துனர்கள் மறுக்க கூடாது என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக புகார்கள் வந்தால் சம்மந்தப்பட்ட நடத்துநர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story