மோசடியில் ஈடுபட்ட வங்கி மேனேஜர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

மோசடியில் ஈடுபட்ட வங்கி மேனேஜர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை
x

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் 2018- 2019 ஆம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி. அங்கு பணியாற்றிய காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து லட்சகணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. புகாரையடுத்து கூட்டுறவு சங்க தணிக்கை குழு அதிகாரிகள் குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கிக்கிளையில் தணிக்கை நடத்தினர். அதில் உமா மகேஸ்வரி 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மேலாளர் உமா மகேஸ்வரியை கைது செய்த வேலூர் குற்றப்பிரிவு போலீசார், வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்