கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிரடி... டிடிவி தினகரன் நண்பரிடம் திடீர் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை சுமார் 230க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவரும், டிடிவி தினகரனின் நண்பருமாகிய நாமக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
Next Story