ஈபிஎஸ் பேசுவதை நேரலையில் காட்டவில்லை என குற்றச்சாட்டு...முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி...!
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பு செய்வது இல்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்புவது அந்தந்த தொலைக்காட்சிகளின் விருப்பத்தை பொறுத்தது என்றும், இந்த விவகாரத்தில் தொலைக்காட்சிகளை கட்டாயப்படுத்த முடியாது என்றும் விளக்கம் அளித்தார். இதனையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜீரோ ஹவரில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை மட்டும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்பது ஏற்புடையதல்ல என்றார். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக உறுப்பினர்கள் அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
Next Story