விபத்தில் உயிரிழந்த மகனை எழுந்து வரக்கூறி தாயார் கண்ணீர்...
விபத்தில் உயிரிழந்த மகனை, தாயார் எழுந்து வரக்கூறி பிணவறை முன்பு கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருதுமுத்து என்பவரது மகன் சதாசிவம். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக மாணவர் ஊருக்கு வந்திருந்த நிலையில், செஞ்சியில் வசிக்கும் தனது நண்பரை பார்த்து விட்டு மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இதனிடையே, மாணவரது உடல் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர், அவரது தாயார் பிணவறை முன்பு கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story