"ஏற்றுக்கொண்டோம்" - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

x

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாயில் தரைப்பகுதியில் கான்கிரீட் அமைக்க‌க்கூடாது என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழ்பவானி பிரதான கால்வாய் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் 709 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கால்வாயின் தரைப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த‌தாகவும் அவர்களது நியாயமான கோரிக்கையைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைத்திட, விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்