விலகிய ரஷ்யா.. அதிர்ச்சியில் ஐநா.. உச்சகட்ட நெருக்கடியில் உலகம்

x

உக்ரைன் தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனிடையே, போரின் காரணமாக, உக்ரைனின் துறைமுகங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதனால், தானிய ஏற்றுமதி குறைந்து, மிகப்பெரிய உணவு நெருக்கடி ஏற்பட்டது. எனவே, உலகளாவிய உணவு நெருக்கடி போக்கும் நோக்கத்துடன் 'கருங்கடல் தானிய ஒப்பந்தம்' எற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், சில நிபந்தனைகளுடன் ரஷ்யா பங்கேற்றது. இந்நிலையில், ரஷ்யாவின் கருங்கடல் தானிய ஒப்பந்த நிபந்தனைகள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என கூறியுள்ள ரஷ்யா, அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவுக்கு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்