"கலைக்கப்பட்ட கரு.. பஸ் ஸ்டாண்டிலே ரத்தம்.. என் பாப்பா போய்டுச்சு.." - வெளிநாட்டில் கணவன்.. தனியே கதறிய பெண்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடும் ரத்தப்போக்கால், கரு கலைக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர், தனது நிலைமைக்கு கருத்தரித்தல் மையமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

ஓசூர் அருகே டி.ஜி தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜவகர். இவர் மீனா என்பவரை 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜவகர் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தால், ஓசூரில் உள்ள கருத்தரித்தல் மையத்தில் மீனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், கர்ப்பம் தரித்திருக்கிறார். ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருந்த மீனாவுக்கு, கடந்த 20 ஆம் தேதி இரவு திடீரென கடும் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், இரவு நேரமென்பதால் கருத்தரித்தல் மையம் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க வரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாவிற்கு, அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு கருக்கலைக்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மீனா, தான் சிகிச்சை பெற்றுவந்த கருத்தரித்தல் மையம் மீது பரபரப்பு குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்