"அரசு விரைவு பேருந்துகளில் லீன் கட்டண முறை நீக்கம்" - வெளியான புதிய அறிவிப்பு
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் கோடை விடுமுறை முழுவதும் 'லீன் கட்டண முறையை' நீக்கியதால், வார நாட்களில் கூட அரசு ஏசி மற்றும் செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 50 முதல் 150 வரை கட்டணம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் எளிய கட்டண முறை அறிமுகபடுத்தபட்டதுஅதன்படி பயணிகளை ஈர்ப்பதற்காக வார நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் போது 10% முதல் 25% வரை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது . அதேசமயம் வார இறுதி நாட்களில் அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் சலுகைகள் எதுவும் இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது
இந்த நிலையை ஜூன் 15 வரை லீன் கட்டண முறை ரத்து செய்யப்படும் என்று SETC அறிவித்துள்ளது. இதனால் இந்த கோடைக்கு சொந்த ஊர் அல்லது சுற்றுலா செல்பவர்கள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பயணம் செய்யும்போது வார நாட்களிலும் விடுமுறை நாட்களுக்கு நிகரான கட்டணம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது இதன் மூலம் 50 முதல் 150 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை விடுமுறைக்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதால், பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் போக்குவரத்து கழகம் போதிய வருவாய் ஈட்ட திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.