சோளக்காட்டில் கேட்ட திடீர் சத்தம்... ஆள் உயரத்தில் விழுந்த ஓட்டை.. எட்டி பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி
- ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தின் சில பகுதிகள், திடீரென உள்வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே, முருகேசன் என்ற விவசாயி தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.
- அப்போது அதிக சத்தத்துடன் 40 அடி ஆழம் மற்றும் 15 அடி அகலத்தில், நிலம் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட விவசாயி மற்றும் அருகில் பணிபுரிந்தோர் அச்சமடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
- தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறை, போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
- பின்பு 100 மீட்டர் தூரத்திற்கு கயிறு கட்டி, அங்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய அதிகாரிகள், கனிம வளத்துறைக்கு தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Next Story