புதிய உச்சத்தை எட்டிய ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார பரிவர்த்தனை..

x

ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார பரிவர்த்தனைகள், மே மாதத்தில் 10.6 மில்லியனைத் தாண்டியது.புதிய உச்சத்தை எட்டிய ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார பரிவர்த்தனை..

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முக அங்கீகார தீர்வு, மாநில அரசு துறைகள், வங்கிகள் உள்பட 47 நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், பயனாளிகளைப் பதிவு செய்ய இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், பிரதமரின் கிசான் திட்டத்தில் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காகவும், பல்வேறு அரசுத் துறைகளில் ஊழியர்களின் வருகையை பதிவு செய்யவும் முக அங்கீகார பரிவர்த்தனை பயன்படுகிறது. 2021ஆம் ஆண்டு அக்டோர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார பரிவர்த்தனைகள், கடந்த மே மாதத்தில் 10.6 மில்லியனைத் தாண்டியது. இது கடந்த ஜனவரி மாத பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும் போது, 38 சதவீதம் அதிகமாகும்.


Next Story

மேலும் செய்திகள்