போலீஸ் கண்முன்னே கேஸ் குடோன் பூட்டை கல்லால் உடைத்த இளைஞர் - தருமபுரியில் பரபரப்பு
அரூர் அருகே, கேஸ் குடோன் செயல்பட எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எட்டிப்பட்டி கிராமத்தில் கேஸ் குடோன் இயங்கினால் ஊருக்கு ஆபத்து எனக்கூறி, அரூர் - தருமபுரி சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், குடோன் பூட்டை உடைத்தார். மேலும், சிலிண்டர் எடுக்க வந்த வாகனத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், குடோனில் இருந்த சிலிண்டர்களை எடுத்து சாலை வைத்து போராட்டம் நடத்தினர். இதனால், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story