#BREAKING | நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் மூச்சுத் திணறி உயிரிழப்பு - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

x

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தீர்த்தகிரி என்பவரது மகன் அருண்குமார் (24) இவர் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இன்று மதியம் அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் பிரியானி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வழிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர், இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்