ராஜராஜ சோழன் உருவப்படத்தை பச்சை குத்திக்கொண்ட இளைஞர்

x

சேலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் முதுகில் ராஜராஜ சோழனின் உருவப்படம் மற்றும் தஞ்சை பெரிய கோவிலை பச்சை குத்திகொண்டுள்ளார்.

ஐஸ்வர்யம் கார்டன்பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் ராஜராஜசோழன் மீது இருந்த ஈர்ப்பால், தனது முதுகில், தஞ்சை பெரிய கோவில் கோபுரம் மற்றும் ராஜராஜ சோழனின் உருவப்படத்தை பச்சை குத்திகொண்டார்.

சுமார் 14 மணி நேரம் செலவழித்து பச்சை குத்தி கொண்டதாக இளைஞர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்