ஒரு வருடம் மெக்காவிற்கு நடந்தே சென்ற இளைஞர்..!

x

கேரளாவில் இருந்து 8 ஆயிரத்து 640 கிலோமீட்டர் நடந்தே சென்று இளைஞர் ஒருவர் மெக்காவை அடைந்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த ஷிஹாப் சோத்தூர் என்ற இளைஞர், கடந்த ஆண்டும ஜூன் 2ஆம் தேதி மெக்காவை நோக்கி நடை பயணத்தை தொடர்ந்தார். பல்வேறு மாநிலங்கள் வழியாக நடந்து சென்று, இந்திய எல்லைக்கு சென்ற ஷிஹாப், பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கான விசா பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டார். இதனால் வாகா ஆர்ட்டியில் உள்ள அஃபியா பள்ளியில் நான்கு மாதங்கள் தங்கியிருந்தார். பின்னர், ட்ரான்ஸிட் விசா கிடைத்த‌தும், பாகிஸ்தான் வழியாகத் ஈரானைச் சென்றார். தொடர்ந்து, ஈராக் ஈரான் குவைத், சவுதி அரேபியா வழியாக ஹஜ்ஜின் எல்லையை தொட்டார். 370 நாட்களாக, 8 ஆயிரத்து 640 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்காவை அடைந்தார். அங்கு, தனது அன்னைக்காக காத்திருக்கும் ஷிஹாப், அவருடன் சேர்ந்து மெக்காவில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்