பேஸ்புக் லைக் வாங்க ஆசைப்பட்டு கிணற்றில் குதித்து உயிரை விட்ட இளைஞர்..சோகத்தில் தத்தளிக்கும் குடும்பம்

x

திருவண்ணாமலை மாவட்டம் கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சரண், தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது விவசாய நிலத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குதிப்பதை போல் வீடியோ எடுத்து இணையதளத்தில் போட்டால் லைக்குகள் அதிகமாக கிடைக்கும் என்று தனது நண்பர் ரமேஷிடம் கூறியுள்ளார். அவரை செல்போனில் படம் எடுக்குமாறு கூறிய சரண், கிணற்றில் குதித்துள்ளார். நீச்சல் தெரியாததால், மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அதிர்ச்சி அடைந்த ரமேஷ் சத்தமிட்டதால், கிராம மக்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சரணை சடலமாக மீட்டனர். சேத்துப்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை மருத்துவக்கு அனுப்பி வைத்தனர். பேஸ்புக்கில் லைக்குகள் பெற கிணற்றில் குதித்து உயிரை விட்ட சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்