சமையல் கற்றுக்கொள்ள கூறி தாய் கண்டித்ததால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை ...

x

நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், சமைக்க கற்றுக் கொள்ள கூறி தாய் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூனைஞ்சிபட்டி அருகே கீழகோடன் குளத்தை சேர்ந்தவர் கனகமணி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் இருந்தனர். இவரின் மகளான கிறிஸ்டிலா மேரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான வேலையில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்த நிலையில், கிறிஸ்டிலா மேரி செல்போன் பயன்படுத்தி கொண்டே இருந்ததால் சமையல் கற்றுக்கொள்ள கூறி கனகமனி கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால், வேதனையடைந்த கிறிஸ்டிலா மேரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்