ஆசை வார்த்தை கூறி 17 வயது மாணவனை அழைத்து சென்று தனியே இருந்த பெண்
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரை, ஆசை வார்த்தை கூறிக் கடத்திச்சென்ற இளம் பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தச் சேர்ந்த 17 வயது மாணவன், ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென்று மாயமானதால், அவருடைய பெற்றோர், வெள்ளகோவில் காவல் நிலையதிதல் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவரை தேடி வந்த நிலையில், அந்த மாணவர், தாசவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் காயத்ரி என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறி ஓசூர் பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், காயத்ரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story