பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக ஓடும் பஸ் முன் விழுந்து உயிரை விட்ட பெண்.. 1 மாதம் கழித்து அவிழ்ந்த மர்மம்.. சேலத்தில் துயரம்

x

சேலம் முள்ளுவாடிகேட் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. 46 வயதான இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கல்லூரி படிக்கும் மகளும், மகனும் உள்ளனர். கடந்த மாதம் 28ஆம் தேதி தனியார் பேருந்து மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது சாலையில் நடந்து சென்ற பாப்பாத்தி வேண்டுமென்றே பேருந்து முன்பாக விழுந்து தற்கொலை செய்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. பிள்ளைகளுக்கு கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாத பாப்பாத்தி, பேருந்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டால் அதில் வரும் நிவாரணத்தை வைத்து பிள்ளைகள் பிழைத்துக் கொள்வார்கள் என நினைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனிடையே இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை பதற வைத்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்