சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட பெண் போலீஸ்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், பாஸ்போர்ட் விசாரணைக்கு 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக, பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கல்லாலங்குடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த நிலையில், அது குறித்த விசாரணைக்கு ஆலங்குடி காவல் நிலையம் சென்ற போது, பெண் காவலர் சுமதி என்பவர், 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, காவலர் சுமதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Next Story