தகாத உறவில் இருந்த பெண்.. கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட மோதல் - வீட்டின் முன்பு கழுத்தறுத்து கொண்ட பயங்கரம்
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே தகாத உறவில் இருந்த காதலர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்வாடி அருகே கீழுர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரா. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவனின் உறவினரான பிரவின்ராஜ் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்து, ஆத்திரமடைந்த இந்திராவின் கணவன், அவரை பிரிந்து சென்ற நிலையில், பிரவின்ராஜிடன் இந்திரா வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பிரவின்ராஜிக்கும், இந்திராவுக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும், பிரவின்ராஜை வெளியில் தள்ளி இந்திரா கதவை சாத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பிரவின்ராஜ் வீட்டின் முன்பு கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், பிரவின்ராஜை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த, சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.