அமெரிக்காவில் பனியில் உறைந்த பெண்...! கொத்து கொத்தாக மீட்கப்படும் சடலங்கள்... வரலாறு காணாத பனிபுயல்

x

அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயார்க் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாகாணத்தில் உள்ள பஃபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது. பனிப்பொழிவு இடைவிடாமல் தொடர்வதால் வீடுகள், சாலைகள் பனியால் மூடி கிடக்கின்றன. இதற்கிடையே பனிப்பொழிவில் சிக்கிய கார்களில் இருந்து சடலங்கள் மீட்கப்படும் பரிதாபமும் ஏற்பட்டுள்ளது. பஃபல்லோவில் 57 வயது முதியவர் காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 22 வயது இளம்பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிய இளம்பெண், பனிப்பொழிவில் சிக்கிய காரில் 18 மணி நேரங்கள் தவித்து உயிரிழந்து உள்ளார் என தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நகரில் ஆங்காங்கே காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பனி மலையாக கொட்டிக் கிடப்பதால் அங்கு மீட்புப் பணியை முழு வீச்சில் தொடர முடியாத சூழல் நிலவுகிறது. அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 57 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்