பேச, நடக்க முடியாத மாற்றுத்திறனாளியை சரமாரியாக தாக்கிய உறவினர் பெண் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்று திறனாளியை தாக்கிய உறவினரை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.நிலக்கோட்டை, மாவூத்தன்பட்டியை சேர்ந்த சந்திரா, தனது கணவரை இழந்து தனியே வசித்து வந்த நிலையில், கணவரின் அண்ணன் மகனும், மாற்றுத்திறனாளியுமான மணிகண்டனை கவனித்து வந்துள்ளார். இதில், மணிகண்டனால் பேச மற்றும் நடக்க முடியாத நிலையில், அவரை சந்திரா சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வளைதளத்தில் பரவியது. இதில், சந்திராவை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், இனிமேல் இது போன்று செயல்களில் ஈடுபடகூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்