ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி
திருவிடைமருதூரை அடுத்த கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்த பாரதிக்கு மனைவி திவ்யாவும், 2 குழந்தைகளும் உள்ளனர். பாரதி சென்னையில் தங்கியிருந்து டீக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திவ்யாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்த பாரதி மாயமானார். இதுகுறித்து அவருடைய உறவினர், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், சந்தேகத்தின் பேரில் திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யா தனது கள்ளக்காதலன் டேவிட்டுடன் சேர்ந்து பாரதியைக் கொன்று பாலத்தின் அடியில் புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story