ஒரு கிராமத்தின் விலை ரூ.2.1 கோடி - விலைக்கு வாங்க போட்டா போட்டி - அப்படி என்ன ஸ்பெஷல்? | spain

x

வெறும் இரண்டு கோடி ரூபாய் இருந்தால் போதும் ஒரு கிராமத்தையே வாங்கிவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஸ்பெயினில் 44 வீடுகளை கொண்ட ஒரு கிராமத்தை வாங்க பலரும் தற்போது இணையத்தளத்தில் போட்டி போட்டு வருகின்றனர். ஸ்பெயினின் Salto de Castro என்ற மிகவும் பழமையான கிராமம், மாட்ரிட் நகருக்கு அருகே அமைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் நடமாட்டமின்றி, கைவிடப்பட்ட இந்த கிராமம், தற்போது பாழடைந்து வாழ தகுதியற்ற இடம் போல் காட்சியளிக்கிறது. இந்த கிராமத்தை புதுப்பித்து சுற்றுலா தளமாக்க எண்ணி, கடந்த 2000களில் தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். ஆனால் முயற்சிகள் கைகொடுக்காததால் தற்போது 80 வயதான அவர், வேறு வழியின்றி இந்த கிராமத்தை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்க முன்வந்துள்ளார். மாட்ரிட் அல்லது பார்சிலோனா நகரில் ஒரு பெட் ரூம் கொண்ட அப்பாட்மெண்ட்டின் விலையே 2 கோடி கோடி என்ற நிலையில், வெளிநாட்டினர் உட்பட பலரும் இந்த கிராமத்தை வாங்க தற்போது போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்