கோலி - கம்பீர் மோதலை கொண்டு உருவான வீடியோ கேம்..இளைஞர் உருவாக்கிய வீடியோ கேம் இணையதளங்களில் வைரல்
ஐபிஎல் தொடரி ன் 43வது லீக் போட்டியி ல், லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வீழ்த்தியிருந்தது. இப்போட்டி முடிந்த பின்பு பெங்களூரு அணி வீரர் கோலிக்கும், லக்னோ அணி ஆலோசகர் கம்பீருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்த சம்பவம் வைரலானது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இளைஞர் ஒருவர் வீடியோ கேமை உருவாக்கியுள்ளார். அதில் லக்னோ மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் பேட்டால் ஒருவரையொருவர் தாக்குவது போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கேம் காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story