சாலை குழிக்குள் இறங்கிய லாரி.. வெளியேற முடியாமல் திணறல் - ஸ்தம்பித்த கோவை

x

கோவை அருகே தரைப்பால குழிக்குள் இறங்கிய லாரி மேலே ஏற முடியாமல் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கோயம்புத்தூர், தெலுங்குபாளையம் வாய்க்கால்பாலம் சோதனைச் சாவடி அருகே தரைப்பால குழியில் லாரி ஒன்று இறங்கியது. பின்னர், லாரியால் மேலே ஏற முடியாத சூழல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 7 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தரைப்பால பணிக்காக, மாற்றுப் பாதை அமைத்து தராததே விபத்திற்கான காரணம் என அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்