ரஷ்யாவில் திடீர் திருப்பம்..வீடியோ வெளியிட்ட ரஷ்ய அதிபர் புடின்

x

வாக்னர் குழு போராளிகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரில் ரஷியாவுடன் இணைந்து செயல்பட்ட வாக்னர் குழு என்ற தனியார் படை, பாக்மத் நகரை கைப்பற்றியது உள்பட போரில், முக்கிய பங்காற்றியது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, அக்குழு ரஷ்யாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. ரஷ்யா தங்களுக்கு ஆயுதம் வழங்கவில்லை என்றும், தங்கள் வீரர்களையே ரஷ்யா கொன்றதாகவும் குற்றம்சாட்டியது. வாக்னர் குழுவின் இந்த திடீர் புரட்சி உடனடியாக முடிவுக்கு வந்த நிலையில் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதின், பெரும் ரத்த சேதங்களை தவிர்க்க உதவியதற்காக, வாக்னர் குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வாக்னர் குழு போராளிகள் விரும்பினால் பெலாரஸ் நாட்டுக்கு செல்லாம் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு, வீடு திரும்பலாம் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்