தமிழகத்தையே ஒரு நொடி பதறவிட்ட திடீர் ரயில் விபத்து
குன்னூரில், மலை ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால், மலை ரயில் சேவை ஒருநாள் ரத்து இன்று (08.06.2023)செய்யப்பட்டுள்ளது.
குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி 180 சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றவுடன், திடீரென கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால், மலை ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், ரயிலில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கீழே இறக்கி, பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், மலை ரயில் சேவை இன்று (08.06.2023) ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story