திடீரென வீசிய பலத்த காற்று... சட்டென முறிந்து விழுந்த மரக்கிளை - விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

x

கேரள மாநிலம், கொச்சியிலுள்ள ஆலுவா பகுதியில் உள்ள பகவதி கோயிலுக்கு அருகே மிகப்பெரிய அரச மரம் உள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் கோவிலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பலத்த காற்று வீசியதில், மரத்தின் ஒரு பகுதி உடைந்து சாய்ந்தது. இதைப் பார்த்த சிறுவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியபோதும், 3 சிறுவர்கள் உடைந்து விழுந்த மரத்தின் கீழ் சிக்கிக் கொண்டனர். அவர்களில் இருவரை மீட்புக் குழுவினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஷ் என்பவரின் மகன் அபினவ் கிருஷ்ணாவை காணவில்லை என்று அவனுடைய உறவினர்கள் கூறியதால், அதைத் தொடர்ந்து தேடியதில், சிறுவன் அபினவ் மரத்தின் அடியில் சிக்கியிருப்பது தெரியவந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்