புதிதாக போடப்பட்ட தார் சாலையில் திடீர் பள்ளம் - சிக்கி புதைந்த லாரியால் திணறிய போக்குவரத்து
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே M.சேன்ட் மணலை ஏற்றி சென்ற டிப்பர் லாரியின் பின்பக்க டயர், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் புதைந்துள்ளது.
காட்டூர் ரோடு பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில், திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவ்வழியாக வந்த டிப்பர் லாரியின் டயர் பள்ளத்தில் சிக்கியுள்ளது.
இந்த லாரியை பள்ளத்தில் இருந்து அகற்ற சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலானதால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
Next Story