சென்னையில் திருமண வீட்டில் திடீர் தீ விபத்து...கேட்ட அலறல் சத்தம்.. கொளுந்து விட்டெறிந்த பதைபதைக்கும் காட்சி

x

சென்னையில் திருமண வீட்டில், ஏ.சி. மூலம் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்த பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை தி.நகர் யோகாம்பாள் தெருவில் வசித்து வருபவர் ஜத்மால். இவரது இல்லத்தில், சகோதரர் பிரமோத்தின் மகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது. பிரமோத்தின் உறவினர்கள் 30 பேர் ஜத்மாலின் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், நள்ளிரவில், முதல் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசி மூலம் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், தீ விபத்தில் திருமண உடைமைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. வீட்டில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்