திடீரென கொளுந்துவிட்டு எரிந்த தீ - கருகி எலும்புக்கூடான பைக்குகள்

x

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

சுந்தர விநாயகர் தெருவில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில், தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தது.

உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி, தீயை அணைத்தனர்.

இதில், 50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்