விஷம் தந்து கொல்லப்பட்ட மாணவன் - உறவினரிடம் உறுதி கொடுத்த அமைச்சர்
காரைக்காலில், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவனின் உறவினர்களை, புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மருத்துவரின் அலட்சியம் காரணமாக, மாணவன் உயிரிழந்ததாக அப்போது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
பின்னர் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், மருத்துவர் தவறு செய்தது உறுதியானால், கண்டிப்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Next Story