பிளஸ்2வில் 438 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்... கொண்டாடி தீர்த்த நரிக்குறவர் சமூகத்தினர் - இனிப்பு ஊட்டிய ஆட்சியர்... நெகிழ்ச்சி சம்பவம்

x

சிவகங்கை பழமலை நகரில் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமூகத்தினர், பல தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். ஜெயபாண்டியின் மகன் தங்கபாண்டி என்பவர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண் எடுத்துள்ளார். இதனை நரிக்குறவர் சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மாணவர் தங்கபாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் வரவழைத்தார். மாணவருக்கு தனது கையால் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார். மாணவரின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட ஆட்சியர், மேல்படிப்புக்கு உதவுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்