ஒரே நாளில் ஹீராயினாக மாறிய மாணவி.. ஆட்டோ கிராப் கேட்கும் சக மாணவர்கள்
75வது சுதந்திர தின விழாவை அமுத பெருவிழாவாக மத்திய, மாநில அரசுகள் கொண்டாடிவரும் நிலையில் கொளப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இதில் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பெண்கள் தங்களை காத்து கொள்வதற்கான தற்காப்பு நிகழ்ச்சியை மாணவி ஒருவர் சிலம்பம் சுற்றியும் கைகளில் கத்தியை ஏந்தியும் செய்து காட்டினார். பலத்த கரகோஷனுடன் மாணவர்கள் ரசித்தனர். மேலும் சிலம்பம் சுற்றி முடித்த பிறகு அந்த மாணவியை பிரபல நடிகையை பார்த்தது போல் ஆரவாரம் செய்து மாணவர்கள் ஓடி சென்று ஆர்வமாக கை கொடுத்தனர். பின்னர் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும், மதியம் மாணவர்களுக்கு பிரியாணி விருந்துடன் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை கொளப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடத்தியது அனைவரையும் கவர்ந்தது.