மண் பாதையில் இழுத்து செல்லப்பட்ட ஸ்ட்ரெச்சர்.. வலியில் துடித்த அறுவை சிகிச்சை பெற்ற நோயாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அரசு மருத்துவமனையில், மண் பாதையில் ஸ்ட்ரெச்சர் இழுத்து செல்லப்பட்டதால், அறுவை சிகிச்சை பெற்ற நோயாளி வலியால் துடித்த காட்சி அங்கிருந்தவர்களை வேதனை அடைய செய்தது.
அறுவை சிகிச்சை அறையில் இருந்து உள்நோயாளிகளை பொதுப்பிரிவு அறைக்கும் மாற்றும் வழியை சிமெண்ட் தளமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
Next Story