நடுரோட்டில் கொட்டிக்கிடந்த கற்கண்டு - கையில் எடுத்து பார்த்தால் ரோடு-ஆய்வுக்கு சென்ற MLA-க்கு ஷாக்!
காரைக்காலில், புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை கையோடு பெயர் ந்து வந்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ. அதிர்ச்சியடைந்தார். திருப்பட்டினம் வடகட்டளை கிராமத்தில், 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 67 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டன. நேந்றிரவு அவசர அவசரமாக சாலை போடும் பணிகள் நடைபெற்றன. இன்று காலை, சாலை பெயர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அதுகுறித்து தி.மு.க எம்.எல்.ஏ. நாக தியாகராஜனிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் நாகதியாகராஜன் ஆய்வு செய்தபோது, கையோடு தார்ச்சாலை பெயர்ந்து வந்தது. தரமற்ற முறையில் சாலை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
Next Story